சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியீடு

செவ்வாய், 30 ஜனவரி 2018 (16:35 IST)
நடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால், மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார். சமந்தாவின் திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்தது. புகுந்த வீட்டார் சம்மதத்துடன் நடிகை சமந்தா மீண்டும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் பல படங்கள் முடிந்துள்ள நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் தமிழில் நடித்த ‘நடிகையர் திலகம்’ படமும் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாகும்.
 
அது மட்டுமின்றி மார்ச் 30ம் தேதி ராம் சரணுடன் இணைந்த நடித்த ‘ரங்கஸ்தலம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படி இரண்டு நாட்களில் மூன்று படங்கள் வெளியாவதால் அதிக சந்தோஷத்தில் இருந்து வருகிறார் சமந்தா என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்