சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரித்விகா

செவ்வாய், 21 ஜூலை 2020 (09:08 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, மற்றும் அவரது தயாரிப்பில் உருவான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை ரித்விகா பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்திற்காக ரசிகர் ஒருவர் ’பருவத்தில் பன்னி கூட அழகாகத்தான் இருக்கும்’ என்று கூறி அவரது ஜாதிப் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார்
 
இதனால் ஆத்திரமடைந்த ரித்விகா ’சரிங்க மிஸ்டர் பாடு... சாரி மிஸ்டர் மாடு’ என்று பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகாவின் இந்த தைரியமான பதிலடி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்