ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

புதன், 17 பிப்ரவரி 2021 (15:53 IST)
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக 50 நாட்களை படம்பிடித்துள்ளது படக்குழு. இதையடுத்து படத்தின் ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் தமிழக திரையரங்க உரிமையை லைகா நிறுவனம் இதுவரை எந்தவொரு படத்துக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்