கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்த படக்குழு!

vinoth

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:05 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.

இந்த படம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஷூட்டிங் முடியவில்லை. எப்போது ரிலீஸ் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை இன்னும் 40 நாட்களில் முடிக்க உள்ளதாகவும், படத்தை சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்