’லியோ’ படத்தில் இணையும் 2 பிரபலங்கள்.. ஒருவருக்கு ‘ரோலக்ஸ்’ போன்ற கேரக்டர்?

செவ்வாய், 4 ஜூலை 2023 (09:43 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத் உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி ’லியோ’ திரைப்படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராம்சரண் தேஜாவுக்கு விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் போன்ற கேரக்டர் என்றும் அனுராக் காஷ்யப்பிற்கு சிறப்பு தோற்றம் என்றும் கூறப்படுகிறது.
 
 தொடர்ந்து ’லியோ’ திரைப்படத்தில் பிரபலங்கள் இணைந்து கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதோடு இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்