லோகேஷுடன் இணையும் படம் பற்றி பேசிய ரஜினிகாந்த்!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் படத்தையும் லோகேஷ் லியோ படத்தையும் முடிக்க உள்ளனர். இந்நிலையில் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக சூலூர் வந்த ரஜினிகாந்தை பத்திரிக்கையாளர்கள் சந்தித்து அவரும் லோகேஷும் இணையும் படம் பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் “லோகேஷ் படம் இன்னும் தாமதமாகும். முதலில் ஞானவேல் படத்தில் நடித்த பின்னர்தான் லோகேஷ் படத்தில் நடிப்பேன். லோகேஷ் படம் கண்டிப்பாக நல்லா வரும்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்