மீண்டு வந்த ரஜினி; மீண்டும் தொடங்கும் அண்ணாத்த! – படப்பிடிப்பு எப்போது?

திங்கள், 8 பிப்ரவரி 2021 (12:52 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் அது மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை சமீபத்தில் இயக்குனர் சிவா நேரில் சென்று சந்தித்து வந்தார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கி ஒரு மாதம் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்