லோகேஷ் படத்தில் ரஜினிக்கு இந்த லுக்தான்…விண்டேஜ் ரஜினி தரிசனம் கன்ஃபார்ம்!

vinoth

புதன், 7 பிப்ரவரி 2024 (07:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் ரஜினியை மிகவும் ஸ்டைலாகக் காட்ட தளபதி படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படி இருந்ததோ அது போல அவருடைய கெட்டப்பை வடிவமைத்துள்ளார்களாம். இதனால் லோகேஷ் படத்தில் விண்டேஜ் ரஜினியை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்