கொரோனாவுக்குப் பிறகு கதாநாயகன் ஆகும் தம்பி – ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் பதிவு!

ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:13 IST)
தனது தம்பி எல்வினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இந்தியிலும் அக்‌ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது தம்பியான எல்வினுக்கு இன்று பிறந்தநாள் கூறிய லாரன்ஸ் , மேலும் அவருக்கு அன்பளிப்பாக தனது தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

இது சம்மந்தமாக ’ஒவ்வொரு ஆண்டும் நான் அவருக்கு ஒரு ஆச்சரியத்தைத் திட்டமிடுகிறேன். இதேபோல், இந்த ஆண்டும் ஒரு பெரிய ஆச்சரியத்தை அளிக்கவிருக்கிறேன். கதாநாயகனாக வேண்டும் என்பதே அவரது(எல்வின்) கனவு. எங்களது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, தற்போது ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ராகவேந்திர புரொடக்ஷன் தயாரிப்பில் ராஜா இயக்கவுள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். கொரோனா நிலைமை சீரடைந்ததும் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று நம்புகிறேன். எனது சகோதரருக்கு உங்களது ஆசீர்வாதங்களும் ஆதரவும் தேவை.’ எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே எல்வின் காஞ்சனா 2 படத்தில் ஒரு பாடலுக்கு லாரன்ஸுடன் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்