ஹரிஷ் கல்யாணியின் ஸ்டார் படம் ட்ராப்… தனுஷிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்!

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:17 IST)
பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் மீண்டும் ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தை தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்