பிரபாஸின் சலார் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:02 IST)
பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் போலவே இருப்பதாக கூறினர்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்