பரத்தின் பொட்டு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

திங்கள், 7 மே 2018 (18:45 IST)
வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்துள்ள பொட்டு திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
செளகார்பேட்டை’ படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘பொட்டு’. பரத் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, பரணி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூர் அலிகான், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்