போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு?

வெள்ளி, 14 ஜூலை 2023 (09:28 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்ற திரைப்படங்களில் போர் தொழில் படமும் ஒன்று. போர் தொழில் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

முதலில் இந்த திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சோனி லிவ்வில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியில் வெளியாகவில்லை. இதற்குக் காரணம் இந்த திரைப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதுதான் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்