பொன்னியின் செல்வன் 2 முன்பதிவில் சுணக்கம்!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:43 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன்கள் நடந்து வரும் நிலையில், முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படத்துக்கு முன்பதிவு இல்லை என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்கள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்