பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:58 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்