வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

வியாழன், 19 நவம்பர் 2020 (17:07 IST)
சமீபத்தில் ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் பல இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் ஈடுபட்ட நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, இன்று வீரர்கள் மற்றும் நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது.
விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகளை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனவர் என்பதை உணரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்