குட்டி டவுசர், தம்மாத்துண்டு டிஷர்ட், ஷார்ட் ஹேர்கட் - மொத்ததுல முழு புல்லிங்கோவாக மாறிய ஓவியா!

சனி, 23 மே 2020 (09:25 IST)
பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர்  தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்  ஓவியா.

பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ஆனால், அதையெல்லாம் இக்னோர் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் ஓவியா சிம்பிளான போட்டோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மொத்த கூட்டத்தையும் தான் பக்கம் திரும்பியுள்ளார். அரைகுறை ஆடையில் ஸ்லிம் பியூட்டியாக இருக்கும் ஓவியாவை அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்