விஜய்யின் 'லியோ' பட அடுத்த அப்டேட்... ரசிகர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (13:09 IST)
லியோ படத்தின் புதிய அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்   வாரிசு படத்தின் வெற்றிக்குப் பின் நடித்து வரும் படம் லியோ. இப்படத்தை மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  

இப்படத்தில் விஜயுடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன், மிஸ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும்  அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில்,   நடிகர் விஜய் வெகேசனுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.   இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சஞ்சய் தத் பிறந்த நாளையொட்டி, லியோ படத்தில் அவர் சம்பந்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறினர்.

இந்த நிலையில், இன்று நடிகர் அர்ஜூன் பிறந்தநாள் என்பதால் அவருக்கு சர்ப்பிரைஸ் பரிசு அளிக்கும் வகையில் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடும் என தெரிகிறது.

நடிகர் அர்ஜூன் #HaroldDas என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று 5 மாலை  மணிக்கு வெளியாகும் என்று லியோ  படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#HaroldDas is arriving at 5pm

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்