ஓடிடியில் வெளியானது மலேசியா டூ அம்னீஷியா திரைப்படம்!

வெள்ளி, 28 மே 2021 (14:44 IST)
ராதாமோகன் இயக்கத்தில் உருவான “மலேசியா டூ அம்னீசியா” திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியானது.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியுள்ளன.

அந்த வகையில் வைபவ் நடித்த காமெடி படமான “மலேசியா டூ அம்னீசியா” என்ற படமும் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராதாமோகன் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்