நயன்தாரா என்ன யோக்கியமா? பிரபல இயக்குனர் விளாசல்..

ஞாயிறு, 31 மார்ச் 2019 (16:28 IST)
ராதாரவி பேசியது தவறு தான் என்றும் அதேபோல் நயன்தாரா மேலும் தவறு இருக்கிறது என இயக்குனர் லெனின் பாரதி கூறியுள்ளார்.
 
சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் பேசிய ராதாரவி நயன்தாராவைப் பற்றி சில சர்ச்சையானக் கருத்துகளைக் கூறினார். இதனால் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பல திரையுலகத்தினர் ராதாரவிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியை விட அவரின் பேச்சுக்கு கைதட்டிய ரசிகர்களை என்ன கூறுவது என்றே தெரியவில்லை என கூறினார் விக்னேஷ் சிவன். இந்த விஷயம் திமுக தலைமைக்கும் சென்றது. 
அதனால் உடனடியாக திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராதாரவி நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ராதாரவியும் தன் பேச்சுக்கு மனவருத்தம் தெரிவித்தார்.இதையடுத்து திமுக தலைமைக்கு நயன்தாரா உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதியிடம் ராதாரவி சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
அப்போது பேசிய அவர், ராதாரவி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் எப்பொழுதும் இப்படிதான் பேசி வருகிறார். நயன்தாரா பற்றி தவறாக பேசும்போது கோபப்பட்ட விக்னேஷ்சிவன். இதே நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தில் பல இரட்டை அர்த்தங்களை(பார்த்திபனிடம் உங்கள போடட்டுமா சார்) பேச வைத்தார். அந்த படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கை தட்டினார்கள். அப்போதெல்லாம் ஏன் இவர்களுக்கு கோபம் வரவில்லை.
இந்த மாதிரி இரட்டை அர்த்தங்களை நம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததே இவர்கள் தான். அப்படியிருக்க ரசிகர்களை குறை கூறுவதில் இவர்களுக்கு தகுதி இல்லை. படத்தில் இந்த மாதிரி இரட்டை அர்த்த காட்சிகளை வைத்து சம்பாதிப்பார்களாம். ஆனால் இதுவே இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்றால் கோபப்படுவார்களாம். இதில் என்ன ஞயாயம்? 
 
என்னை கேட்டால் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒரு ராதாரவியே என அவர் கூறியிருக்கிறார். லெனின் பாரதியின் இந்த கருத்திற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்