லாலேட்டன் படத்தில் ஜாக்கிசான்..?? குஷியில் ரசிகர்கள்

Arun Prasath

புதன், 22 ஜனவரி 2020 (19:05 IST)
மோகன் லாலுடன் இணைந்து பிரபல நடிகர் ஜாக்கிச் சான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பர்ட் ஆண்டனி இயக்கத்தில் தயாராகவுள்ள “நாயர் சன்” என்ற திரைப்படத்தில் மோகம் லாலுடன் ஜாக்கி சான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என மல்லுவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. இத்திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்பு நடைபெற்ற வரலாற்றை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்