மிஷ்கினை கோபப்படுத்திய சாய் பல்லவி...

சனி, 24 மார்ச் 2018 (21:51 IST)
இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் படத்தை அடுத்து தற்போது சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சாந்தனு ஹிரோவாக நடிக்கவுள்ளார். 
 
இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் துவங்குகிறது. 
 
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நடிப்பதற்கு சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
 
ஆனால், அவரோ கடஹி கேட்காமல் அதிக தொகை சம்பளம் கேட்டும், சாந்தனுவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியும் உள்ளார். இதனால் கோபமான மிஷ்கின் சாய் பல்லவி இனி என் படத்துக்கு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். 
 
மேலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை சமந்தாவிடம் மேற்கொள்ள உள்ளனராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்