’மைக்கேல் மதனகாமராஜன் 2’ சாத்தியமா? இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் பேட்டி

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (19:04 IST)
michale madhana kamarajan
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய திரைப்படம் ’மைக்கேல் மதன காமராஜன்’. கமலஹாசன் 4 வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் குஷ்பு, ரூபினி மற்றும் ஊர்வசி நாயகிகளாக நடித்து இருந்தனர். முக்கிய வேடத்தில் நாகேஷ் நடித்திருந்தார் 
 
இந்த படம் சூப்பர்ஹிட்டாகி இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய படமாக உள்ளது. இந்த படம் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பினால் கூட முழு அளவில் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மைக்கேல் மதன காமராஜன் படம் இரண்டாம் பாகம் சாத்தியமா என்பது குறித்து இந்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் பின் இரண்டாம் பாகம் சத்தியமாக சாத்தியமே இல்லை என்றும் அந்த படத்தில் நடித்த நாகேஷ் உள்பட ஒரு சிலர் தற்போது உயிருடன் இல்லை என்றும் மேலும் இந்த படத்தின் கைவைக்க தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்