மாஸ்டர் ரிலீஸ் எப்போது? இந்த டேட் பர்ஃபெக்ட் ட்ரீட்ட இருக்கும்ல...

புதன், 15 ஏப்ரல் 2020 (16:34 IST)
மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் பட ரிலீஸ் இன்னும் தள்ளிப்போய் உள்ளது. 
 
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. 
 
கடண்டஹ் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீஸ் இன்னும் தள்ளிப்போய் உள்ளது. எனவே படம் மே 3-க்கு பிறகே வெளியாகும் என தெரிகிறது. 
 
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்