விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு குட் நியூஸ் !

புதன், 16 டிசம்பர் 2020 (16:09 IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட உள்ளதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த படம் பொங்கலன்று திரையரங்குகளில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் திரையரங்கில்தான் ரிலீஸாக வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்க்கின்றனர். இதையடுத்து இன்று மாலைக்குள் சென்சார் தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் மாஸ்டர் படம் கிட்டத்தட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்