டுவிட்டரில் வேகமாக பரவி வரும் ‘மாஸ்டர்’ சென்சார் சர்டிபிகேட்: படக்குழுவினர் அதிர்ச்சி

திங்கள், 25 மே 2020 (19:54 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகலாம் அல்லது அதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படம் சென்சார் ஆகிவிட்டதாகவும் சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 2நிமிடங்கள் என்றும் அந்த சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன
 
இது குறித்து படக்குழுவினர் விளக்கமளிக்கும் போது ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை என்றும் சென்சார் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது என்றும் அதை விஜய் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த சான்றிதழ் போலியானது என்பதை உறுதி செய்துள்ளனர் 

#Master is yet to be censored, there is a fake censor certificate circulating online, kindly ignore. @actorvijay @Dir_Lokesh @MrRathna @Jagadishbliss @XBFilmCreators @7screenstudio @MasterMovieOff.

— #MASTER (@MasterMovieOff) May 25, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்