உலகளவில் வசூலில் நம்பர் ஒன்; மாஸ் காட்டிய மாஸ்டர்!

திங்கள், 18 ஜனவரி 2021 (16:28 IST)
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியான நிலையில் உலகளவில் பெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு பொங்கலையொட்டு ஜனவரி 13 அன்று வெளியானது. திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் உலக அளவில் வார இறுதி நாட்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மாஸ்டர் திரைப்படம் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை இதன் மூலம் மாஸ்டர் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்