’தலைவர் 168’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்!

புதன், 22 ஜனவரி 2020 (20:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’மன்னவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தகவல்கள் கசிந்த ஒரு சில நிமிடங்களில் ரஜினி ரசிகர்கள் ’மன்னவன்’ என்ற டைட்டிலில் தாங்களாகவே ஒரு போஸ்டரை டிசைன் செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றன. இந்த படத்திற்கு உண்மையிலேயே ’மன்னவன்’ டைட்டில் தானா என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே ரஜினி ரசிகர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்