மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குரின் அடுத்த படம் தமிழில்?

Sinoj

திங்கள், 4 மார்ச் 2024 (22:30 IST)
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி   ரிலீஸான இப்படத்தை சிதம்பர்ம எஸ் கொடுவால் இயக்கியுள்ளார்.  சவுபின் ஷாயிர், ஸ்ரீ நாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார்.
 
இப்படம் ரூ 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபு  உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
 
இப்படம் மொழி கடந்து அனைவரும் வரவேற்றுள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமையில் இப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் மட்டும் 850 காட்சிகள் ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை  இன்று உலகமே கொண்டாடி வரும் நிலையில்,  இப்படம் தயாரிப்பில் இருக்கும்போதே இப்பட இயக்குனர் சிதம்பரத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் தமிழ் சினிமா தயாரிப்பாளர் (ரோமியோ பிக்சர்ஸ்)  ராகுல்.  இவர் எதன் அடிப்படையில் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், தமிழ் தயாரிப்பாளரும், மலையாள  இயக்குனரும் இணைந்துள்ள படம் தமிழ் படமா? மலையாள படமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்