தளபதி 65 ல் இணைந்த நடிகை – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:36 IST)
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 படத்தில் மடோன்னா செபாஸ்டியன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது ரசிகர்களுக்கு தரமான அறிவிப்பு காத்திருக்கிறது. இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மடோன்னா செபாஸ்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஸ்டண்ட் இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்ற உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்