‘மாநாடு’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: புதிய தகவல்

செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:15 IST)
சிம்பு  நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் இன்னொரு திரைப்படமான மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த வாரம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் களிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது
 
இந்த வாரம் வியாழன் அல்லது வெள்ளியன்று மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்/ மேலும் இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர் முதலமைச்சர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவரது கட்சியில் உள்ள ஒரு தொண்டனாக சிம்பு நடித்துள்ளதாகவும் ஒரு கட்டத்தில் தொண்டனே முதலமைச்சரை எதிர்த்து போராடுவது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்