இயக்குனர் லிங்குசாமி ஓட்டு போடவில்லையா? அவரே அளித்த விளக்கம்

புதன், 7 ஏப்ரல் 2021 (21:28 IST)
இயக்குனர் லிங்குசாமி ஓட்டு போடவில்லையா? அவரே அளித்த விளக்கம்
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இருப்பினும் ஒரு சிலர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து ஒரு சில ஊடகங்கள் யார் யார் வாக்களிக்கவில்லை என்பது குறித்த செய்தியை வெளியிட்டு வந்தன. வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்கள் முன் விரலை காண்பித்து போஸ் கொடுத்தால் மட்டுமே அவர் வாக்களித்தார் என்றும் அமைதியாக வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றவர்கள் எல்லாம் வாக்களிக்காத லிஸ்டில் ஒரு சில பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன 
 
அதேபோல் இயக்குநர் லிங்குசாமியும் வாக்களிக்கவில்லை என்று ஊடகங்களின் பட்டியலில் இருந்தார். இதனை அடுத்து லிங்குசாமி இது குறித்து விளக்கமளித்துள்ளார். ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில் என் வாக்கை செலுத்த சென்னை வந்தேன் சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் என் கடமையைச் செய்தது போல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்