லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது, காரணம் இதுதான்: தயாரிப்பாளர் லலித்குமார்

சனி, 21 அக்டோபர் 2023 (11:55 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்றும் ரிலீஸுக்கு முன்னர் கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களில் 500 கோடியை தாண்டும் என்றும் மொத்த வசூல் ஆயிரம் கோடியை தொடும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் அளித்த பேட்டியில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் காரணம்  வட இந்தியாவில் நாங்கள் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் அதிகாலை 4 மணி காட்சிக்கு நிறைய முயற்சி செய்தோம் என்றும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதனால் வசூல் குறைந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்