அனிமல் படத்தை பார்க்காதே என என் மகள்கள் எச்சரித்தனர்- குஷ்பு வேதனை!

vinoth

புதன், 28 பிப்ரவரி 2024 (07:10 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார். இந்த படத்தைப் பற்றி பாலிவுட் பிரபலங்களான ஜாவேத் அக்தர் மற்றும் கங்கனா ரனாவத் போன்றவர்களும் எதிர்மறை விமர்சனங்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமாக உள்ள குஷ்பு இதுபோன்ற படங்கள் வெற்றி பெறச்செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசும்போது “பெண் வெறுப்பை போதிக்கும் அனிமல் போன்ற ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்றால் நாம் மக்களின் மனநிலையை சிந்திக்க வேண்டும். இந்த இயக்குனர் இயக்கிய ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ படங்களிலும் கூட பிரச்சினை இருந்தது.

என் மகள்கள் அதுபோன்ற படங்களை பார்க்க விரும்புவதில்லை. ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றி அறிய பார்த்தார்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு வந்து என்னிடம் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம் எனக் கூறினர்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்