ஊடகங்களைப் பற்றி தவறாக பேசினாரா குஷ்பூ – ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

புதன், 10 ஜூன் 2020 (07:12 IST)
நடிகை குஷ்பு பேசியதாக சமூகவலைதளங்களில் ஒரு ஆடியோ வேகமாகப் பரவி வருகிறது.

நடிகை குஷ்பூ பேசியதாக முடிவுறாத ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் ’பிரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்து விடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு எங்கே இருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான் .கோவிட்-19 தவிர்த்து பிரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் ப்ளீஸ் பத்திரம்’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ஆடியோ பற்றி குஷ்புவே விளக்கம் அளித்துள்ளார். அதில் ’என் பெயரில் பரப்பப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குருப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது.

எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் என்றுமே நான் ஊடகங்களை தரக்குறைவாக பேசியது கிடையாது. பாதி மட்டுமே வெளியாகியுள்ள அந்த வாய்ஸ் மெஸேஜால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த ஆடியோவை யார் பரப்பினார்கள் என்பது தெரியும். ஆனால் நான் அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை. எனது மன்னிப்பே அவருக்கு மிகப்பெரிய தண்டனை. நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே முதுகில் குத்த தயாராக இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்