கவனத்தை ஈர்த்த குருதி ஆட்டம் டீசர் – அதர்வாவுக்கு திருப்பு முனையாக அமையுமா?

சனி, 12 டிசம்பர் 2020 (08:43 IST)
அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இப்போது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு குருதி ஆட்டம் படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வெளியிட்டார். பக்கா ஆக்‌ஷன் படமாக குருதி ஆட்டம் இருக்கும் என்பதை டீசர் உணர்த்தியுள்ளது. இந்த டீசர் இணையத்தில் பலரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக ஹிட் இல்லாமல் தவிக்கும் அதர்வாவுக்கு குருதி ஆட்டம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்