சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்ற கூழாங்கல் திரைப்படம்!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:32 IST)
கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதினைப் பெற்றுள்ளது.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. அதையடுத்து இப்போது ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுள்ளது.

இந்த விருதின் மூலம் படக்குழுவினருக்கு 35 லட்சம் ரூபாய் அளவுக்கு பரிசுத்தொகைக் கிடைத்துள்ளது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்துகொள்ள உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்