கீர்த்தி சுரேஷ் எங்க வீட்டு மாடியில் குடியிருக்கிறார்..விஜய் நண்பரின் மனைவி

வியாழன், 19 நவம்பர் 2020 (21:30 IST)
நடிகர்  விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். இவர் சின்னத்திரைத் தொடர்களில் பிரபல நடிகராக இருக்கிறார். இவரது மனைவி பிரீத்தி இவரும் நடிகையாவார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது நடிகை பிரீத்தி, கீர்த்தி சுரேஷ் எஙக்ள் அப்பார்ட்மெண்ட் மாடியில்தான் சொந்த அபார்ட்மெண் வாங்கியதாகவும் அவர் அங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  முதலில் கீர்த்தி சுரேஷுடன் அதிக நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும் கொரொனா ஊரடங்குக் காலத்தின்போது அவருடம் எங்கள் குடும்பம் அதிக நெருக்கமாகப் பழகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கீர்த்தி சுரேஷிற்கு அசைவ உணவுகள் பிடிக்கும் என்பதால் அவருக்கு சமைத்துக் கொடுப்பதாகவும், அவர் சாக்லெட்டுகள் சமைத்து தனது குழந்தைகளுக்குக் கொடுப்பார்.
அவர் இங்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் இந்த வருடம்தான் அவர் எங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார் எனத்தெரிவித்துள்ளார்.

#Diwali Celebration with friends & Family

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்