வீட்டில் இருந்தபடியே எடுத்த "கார்த்திக் டயல் செய்த எண்" - மேக்கிங் வீடியோ...!

சனி, 23 மே 2020 (13:15 IST)
கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் என்ற கேரக்டரில் சிம்புவும், ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கேரக்டர்கள் இன்னும் பல காதலர்கள் மனதில் கூடி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து VTV ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் இயக்க வேண்டும் என கௌதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் குறும்பட வடிவில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். வெறும் 12 நிமிடங்கள் கொண்ட  இந்த ஷார்ட் பிலிமில் சிம்பு (கார்த்திக்) - திரிஷா (ஜெஸி) கேரக்டரில் நடித்து மீண்டும் காதலில் கரைய வைத்தனர்.

லாக்டவுனில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இந்த குறும்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்தபடியே எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் எவ்வளவு மென்கெட்டுள்ளார் என்று நீங்களே பாருங்கள்... இந்த குழுவின் புதிய முயற்சியும் அதன் வெற்றியும் பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்