கொரோனாவால் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட படம் …மீண்டும் ரிலிஸ் –இயக்குனர் மகிழ்ச்சி!

ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:38 IST)
கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட படங்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் ஒன்று.

பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை கொஞ்சம் தாமதமாகவே பெற்றது. துல்கர் சல்மான், ரக்‌ஷன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்த இந்த படத்த்க்கு பாராட்டுகளால் தியேட்டர்களில் கூட்டம் கூட ஆரம்பித்தபோது, கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்குப் பின்னர் திரையரங்கங்கள் திறக்கப்பட இருக்கின்றன. அதை முன்னிட்டு பிரான்ஸில் உள்ள திரையரங்கில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை அந்த படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்