கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்..!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (18:17 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ஆளவந்தான் என்ற திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் வரும் எட்டாம் தேதி டிஜிட்டலில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மாலை 05.03 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த படத்திற்கும் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த  படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்த இந்த படம் 20 வருடங்களுக்கு முன் தோல்வி அடைந்தாலும் தற்போது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்