ஓடிடி ரிலீஸ் வேண்டாம்… அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:15 IST)
அமைச்சர் கடம்பூர் ராஜு திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய  படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. 17 நாட்கள் இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் விதித்துள்ள புதிய விதியின் திரையரங்கில் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும். அதனால் 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என உறுதி அளிக்க சொல்லி ஏலே படக்குழுவினருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு சிறுபட தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு உண்டாகியுள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரையரங்க உரிமையாளர்களின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்