ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்குத்தான் உதவும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

புதன், 29 ஏப்ரல் 2020 (17:07 IST)
கொரோனா பரபரப்புக்கு இடையே ஜோதிகாவின் தஞ்சை பெரிய கோவில் சர்ச்சை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் இதுகுறித்து நேற்று சூர்யா வெளியிட்ட அறிக்கையால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் ஜோதிகா விவகாரம் குறித்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியபோது, ’ஜோதிகா விவகாரம் தற்போது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. கொரோனா உலகளாவிய பிரச்னையாக இருக்கும் போது ஜோதிகா கருத்து விளம்பரத்திற்கு  தான் உதவும். இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்று கூறினார்.
 
அதேபோல் கமல்ஹாசனின் பால்கனி அரசுகள் குறித்த விமர்சனம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது, ‘“எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார். அரசியலாக மேதாவியாக பேசுவது  சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன். நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசும் பழக்கம் உடையவர். அவர் மக்களை பால்கனியிலிருந்து பார்க்கிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த நேரத்தில் அரசியல் கருத்துக்கள் சரியாக இருக்காது’ என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்