நடிகர் சூரி வழக்கில் இருந்து நீதிபதி இன்று விலகல் !!

வியாழன், 5 நவம்பர் 2020 (16:48 IST)
நடிகர் சூரி தொடுத்த வழக்கில் இருந்து நீதிபதி இன்று விலகியுள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா  மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்
 

இந்த நிலையில் ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீனுக்கு சூரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து சூரி மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனை அடுத்து சூரி, முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரூ.2.7 கோடி பண மோசடி செய்தததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்  மீது நடிகர் சூரி அளித்த புகார் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார்.

2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்குகளில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஸ் சந்திரா அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்