த்ருஷ்யம் 3 க்ளைமேக்ஸ் ரெடி… இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்ட ரகசியம்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:15 IST)
திருஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கதை தயார் என இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார் இயக்குனர். இது சம்மந்தமாக நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழிவினரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமிழிலும் இந்த படம் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜீத்து ஜோசப் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘திருஷ்யம் மூன்றாம் பாகத்துக்கான க்ளைமேக்ஸ் தயாராகி விட்டது. அது மோகன்லாலுக்கும் பிடித்து விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்