ஜெயம் ரவியின் ’’பூமி’’ படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி !

வியாழன், 14 ஜனவரி 2021 (11:53 IST)
ஓடிடியில் ரிலீஸானதும் தற்போது இணையதளத்தில் வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆனால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது படம் பொங்கலை முன்னிட்டு ஒடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில்  ஜெயம் ரவியின் பூமி படம் தற்போது, ஹாட்ஸ்டார்ப்ளஸ் டிஸ்னி ஓடிடி தளத்தில்  வெளியான ஒருமணிநேரத்தில், இணையதளத்தில் படம் வெளியானது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இப்படத் தயாரிப்பாளர் இதுகுறித்து நஷ்ட ஈடுகேட்டு வழக்குத் தொடர்வார் எனத்தெரிகிறது.

சமீபத்தில் மாஸ்டர் படத்தின் 1 மணிநேரக் காட்சிகள் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்