முன்பதிவில் கல்லா கட்டும் ஜவான் திரைப்படம்…!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:24 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையிலும், டிரைலர் வெளியீடு துபாயிலும் நடந்தது. படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆவதை அடுத்து தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒரே நாளில் ஐந்தரை லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக் கானின் முந்தைய படமான பதான் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்