தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இருக்கு அட்டகாச ட்ரீட்! – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!

புதன், 1 ஜூலை 2020 (09:25 IST)
தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் அதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த மாதம் (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. தனுஷ் பிறந்தநாள் அன்று ஜகமே தந்திரம் படத்தின் சிங்கள் ட்ராக் “ராட்சா ராட்சா” என்ற பாடல் வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷின் பிறந்தநாளில் வெளியாகும் இந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்