நடிகை காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பரிசளித்த ஜக்கி வாசுதேவ்

செவ்வாய், 27 மார்ச் 2018 (13:10 IST)
நதிகள் இணைப்பிற்கு ஆதரவு குரல் கொடுத்ததால், ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதனால் காஜல் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
கோவையிலுள்ள ஈஷா யோகா மைய நிர்வாகியான ஜக்கி வாசுதேவ், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நதிகளை இணைப்போம் என்ற பேரணியை நடத்தினார். இதற்கு பல தரப்பட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகையர் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நதிகள் இணைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, ஜக்கி ஒரு பரிசை அனுப்பியுள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட நடிகை காஜல் அகர்வால், சத்குருவிற்கு மிக்க நன்றி, இந்த பரிசை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என தனது டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்