திடீரென்று முடிவை மாற்றிய ஜகமே தந்திரம்… தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்!

சனி, 30 ஜனவரி 2021 (17:00 IST)
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் மார்ச் மாதம் ரிலிஸாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்தது. அதற்குக் காரணம் படத்தை எப்படியாவது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டுமென படக்குழு நினைத்ததே என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படக்குழுவினர் படத்தை நெட்பிளிக்ஸில் டிஜிட்டர் ரைட்ஸ் மொத்தத்தையும் 45 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்